அசெம்ப்ளி(ங்).
பேட்டரி வாங்கி மாளாமல் பேட்டரி ஆப்பரேட்டட் பொம்மைகளை கண்டாலே தெறித்து ஓடிக்கொண்டிருந்த நான் இப்போது அசெம்ப்ளிங் செட்டுகளை கண்டு கலங்கிப் போயிருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு லீகோ(Lego) அசெம்ப்ளிங் செட் ஒன்றை யோஹானின் தாத்தா வாங்கி தந்திருந்தார். 75 பார்ட்ஸ். லீகோ பொம்மை என்னவோ நம் சுண்டு விரல் அளவு தான். அந்த பொம்மை ஓட்டும் படகு செய்யத்தான் அவ்வளவு பார்ட்ஸ் . லீகோவின் படகு சவாரி கற்பனையில் மிதந்து கொண்டே இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டரை மணி நேர உழைப்பு. நிஜமான படகு ஒன்றை கட்டி முடித்த திருப்தியுடன் இன்ஸ்ட்ரக்ஷனை மறுபடி படித்தால் படகை தண்ணியில் போட வேண்டாம் என்று தெளிவாக சொல்லப்பட்டிருந்தது. படகில் லீகோ பொம்மையை வைத்து ஷோகேஸில் வைத்துக்கொள்ள வேண்டுமாம். என்ன கொடுமை! நடுராத்திரி எனது உண்மை சொரூபத்தை காண்பித்து கோவப்படக்கூட திராணி இன்றி அசந்து தூங்கிவிட்டேன்.
உண்மையில் அசெம்ப்ளிங் செய்வதில் ஒரு த்ரில் உண்டு. நம் கையில் ஒரு பொருள் படிப்படியாக உருபெறுவதை ரசிப்பது ஆனந்தமான விஷயம். எண்ட் ப்ராடக்கட்டை பார்க்கும் போது ராணாடார் டிஎம்டி முறுக்கு கம்பியில் கட்டிய வீட்டை பார்ப்பது போல ஒரு மிதப்பு வரும்.ஆனால் எல்லா நேரங்களும் அப்படி அமைவதில்லை. நடுரோட்டில் செருப்பு பிய்ந்து போன எரிச்சல் தான் பெரும்பாலும் மிஞ்சுகிறது.
பல நேரங்களில் செய்முறை விளக்க படங்களை பார்க்கும் போது நமக்கு பிடிக்காத பாடத்தில் பரிட்சை எழுதுவது போலவே இருக்கும் . ஒவ்வொரு ஸ்டெப்பையும் புரிந்துகொள்வதற்குள் எர்வாமேட்டீன் விளம்பரம் நம் கண்முன்னே தோன்றி மறையும். A வை C யில் தலைகீழாக மாட்டி(B எங்கே என்று ஆராய கூடாது) D யை மூன்று முறை சுற்றி மீடியம் சைஸ் நட்டு போட்டு எக்ஸ்ட்ரா ஸ்மால் சைஸ் போல்ட்டு போட்டு .... ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆ நமக்கு கழுத்து திருகி விடும். பல நேரங்களில் பையன் 'அம்மா நீங்க ஏம்மா இப்படி கோணலா உட்கார்ந்திருக்கீங்க?' என்பான் .
இதில் இன்னொரு ப்ரச்சனை சில சமயம் எல்லாம் செய்து முடிக்கும் நேரத்தில் ஏதோ ஒரு சிறு நட்டோ போல்டோ காணாமல் போயிருக்கும் அல்லது வந்த பேக்கிங்லேயே மிஸ் ஆகி இருக்கும். வீட்டையே உருட்டி புரட்டி போட்டு தேடி முடித்தபின் நம் ஆடை மடிப்பிலேயே எங்கேயாவது ஒளிந்து கொண்டிருந்துவிட்டு ரொம்ப நேரமா நம்மள தான் தேடுறாங்க என்று கீழே விழும். கடைசி வரை கிடைக்காமல் போன சிறு சிறு பாகங்களும் உண்டு.இந்த ஏழுகடல் ஏழுமலையெல்லாம் உருண்டு புரண்டு நீந்தி தாண்டி தவ்வி கடைசியாக கிளியைப் பிடிக்கப்போகும் சமயத்தில் ஆரம்பத்தில் செய்த ஏதோ ஒரு சிறு தவறினால் மொத்தத்தையும் கழட்டி மாட்ட வேண்டிய அதிர்ஷ்டமும் பல சமயங்களில் வாய்க்கும். இதற்கெல்லாம் அசந்துவிடவே கூடாது.
பல மணி நேரங்கள் முட்டி மோதி பார்த்து, தலைகீழாக அமர்ந்தும் பார்த்து அசெம்பிள் செய்ய முடியாமல் திணறினாலும் பிள்ளையின் முன் தோல்வியை ஒத்துக்கொள்ள மனசு வரவே வராது. அவ்வாறு ஒத்துக்கொள்ளும் நிலை வரும்போது 'மாற்றம் முன்னேற்றம் ....' என்ற மாம்பழ கலர் போஸ்டரில் வந்ததை போல மோட்டுவலையை வெறிக்க வெறிக்க பார்த்தபடி "இது அவ்ளோ தான்டா கண்ணா, இந்த செட் வேஸ்ட் " என்று சொல்லவேண்டி வரும்.
எனக்கு இப்போதெல்லாம் ஸ்கூல் ப்ராஜக்ட்டுகளை விட வயிற்றில் புளியை கரைப்பது அசெம்ப்ளிங் செட்டுகளாக வரும் கிஃப்டுகள் தான். இவை பெரும்பாலும் நம்மீது எதற்காகவோ, நம்மீது நேரடியாக காட்ட முடியாமல் காண்டாக உள்ள நல்ல நண்பர்களாலேயே நம் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக தரப்படுவதாக நினைக்கிறேன். நம்மை பழிவாங்கும் ஒரு நூதன முயற்சியாக இதற்காக மெனக்கெட்டு அதிகமான பாட்ர்ஸ் உள்ள அசெம்ப்ளிங் செட்டாக தேடிப்பிடித்து வாங்குகிறார்கள் இந்த நல்லெண்ணம் கொண்டவர்கள்.
இது போன்ற அசெம்ப்ளிங் செட்டுகளை குழந்தைகளோடு சேர்ந்து செய்தால் குழந்தைகளுக்கு ப்ராப்ளம் சால்விங் திறன் வரும் என்று நமது அறிவார்ந்த சமூகம் சொல்கிறது. எனக்கென்னமோ இந்த அசெம்ப்ளிங் செட் கிஃப்டாக வர ஆரம்பித்த பிறகு தான் குடும்பத்தில் ப்ராப்ளமே அதிகமானது போல் தோன்றுகிறது. நமக்காக இலவசமாக ஏகப்பட்ட ப்ரச்சனைகள் காத்திருக்கும் போது யாராவது இதை வேறு காசு கொடுத்து வாங்குவார்களா?
சமீபத்தில் யோஹான் பிறந்த நாளைக்கு என் உயிர் நண்பி கொடுத்த ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் பொம்மைக்கு 176 pieces only என்று அதன் அட்டையில்
போட்டிருந்தது. மிரண்டு போய் எடுத்து ஒளித்து வைத்து விட்டேன். அரை நாள் லீவ்
போட்டு தான் அசெம்பிள் செய்ய வேண்டும்.
ஒரு லாரியில் இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் அளவுக்கு பொம்மைக்கு ஏண்டா தர்றீங்க?! நண்பிக்கு நானும் இப்படி ஏதாவது அன்பளிப்பு அளித்து எனது அன்பை காட்ட ப்ரியப்படுகிறேன். நண்பியை பழிவாங்க வேறு நல்ல ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
யாரையாவது பழிவாங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் யோசிக்காமல் உள்ளதிலேயே காம்ப்ளிகேடட் அசெம்ப்ளிங் செட்டை ஒன்றை அவர் பிள்ளைக்கு பரிசளிக்கவும். அதோடு நின்று விடாமல் அம்மா செட் பண்ணிட்டாங்களா, அப்பா இன்னும் பண்ணவே இல்லையான்னு இரண்டு நாளுக்கொருமுறை சிரமம் பார்க்காமல் ஃபோன் போட்டு விசாரிக்கவும். ஏதோ நம்மளால முடிஞ்சது.

3 comments:
Nice narration.... sirichu mudiyala....
Nice narration.... sirichu mudiyala....
Thank you:))
Post a Comment