தண்ணீர் தண்ணீர்.
"என் குழந்தைக்கு எப்பவுமே மினரல் வாட்டர் தான் தருவேன்"
"ஆர் ஓ வாட்டர் தவிர எது குடிச்சாலும் எனக்கு ஒத்துக்காது"
"எனக்கு இந்த ப்ராண்ட் வாட்டர் மட்டும் தான் பிடிக்கும்"
இது போன்ற வசனங்களை இப்போது அன்றாடம் கேட்க முடிகிறது.
தூய்மையான தண்ணீர் என்பது ஒரு 'முழுமையான' உணவு. அதில் இதை சேர்த்து, அதை எடுத்து, ஒன்றை அதிகப்படுத்தி மற்றொன்றை குறைத்து நம் கைவரிசையை காட்ட ஆரம்பிக்கும் போது தண்ணீர் அதன் தூய்மையையும், நம் உடலுக்கு இயற்கையாக அளிக்க கூடிய நற்பலன்களையும் இழந்து விடுகிறது.
தண்ணீரில் இயற்கையில் என்னென்ன கலந்துள்ளன? புட்டிகளில் அடைத்து விற்கப்படும் தண்ணீரில் என்னென்ன கலக்கப்படுக்கிறது? என்னென்ன நீக்கப்படுகிறது? தண்ணீர், தெள்ளத் தெளிவாக கலங்கல் இல்லாமல் இருந்தால் மட்டும் போதுமா?நாம் பருகும் தண்ணீர் எந்த அளவு பாதுகாப்பானது? மொத்ததில் எந்த வகையான நீரை குடிக்கிறோம்?
தாகத்துக்கு அருந்தும் தண்ணீரைப் பற்றி இப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிக்க நமக்கு நேரம் உண்டா? ஆனால் தாம் பருகும் தண்ணீர் சரியானது தானா என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு முன் குடிதண்ணீர் என்னென்ன பெயர்களில் இயற்கையிலும் , சந்தையிலும் வலம் வருகிறது என்று பார்ப்போம்.
ஊற்றுத் தண்ணீர் (Spring water)
உலகிலேயே மிகவும் தூய்மையான நீராக கருதப்படுவது ஊற்றுத் தண்ணீர் தான். எந்த ரசாயனங்களும் கலக்காத, நமக்கு தேவையான அனைத்து கனிமங்களும் நிறைந்த , இயற்கையே வடிகட்டி தரும் உறுத்தாத சுவையுடன் கூடிய தண்ணீர். ஊற்றுத் தண்ணீர் பாட்டில்களில் அடைப்பட்டு மார்க்கெட்டுக்கு வந்து விட்டாலும், அதன் எக்குதப்பான விலை தான் யோசிக்க வைக்கிறது. எல்லோருக்கும் ஊற்றுத்தண்ணீர் என்பது எல்லோருக்கும் சமமான கல்வி போன்றது. எந்த அளவு அது நடைமுறையில் சாத்தியம் என்பது கேள்விகுறியே.
பொங்கு நீர் கிணறு (Artesian well).
இதுவும் ஒரு வகையான ஊற்றுத்தண்ணீரே.
நிலத்தடி அழுத்தம் காரணமாக தண்ணீர் நாம் பம்பு போட்டு எடுக்க வேண்டிய அவசியமின்றி தானாகவே தரைமட்டம் வரை நிரம்பி தளும்பி நிற்கும். குடிப்பதற்கு மிகவும் உகந்த தண்ணீர். ஆனால் கிடைப்பது அரிது, ஊற்றுத்தண்ணீரைப் போலவே.
ஆல்கலைன் வாட்டர்( Alkaline water)
இவ்வகை தண்ணீர் அதன் ஆல்கலைன் பதத்திற்காகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட் (anti- oxidant) தன்மைக்காகவுமே தேர்வுசெய்யப்படுகிறது.
கார்பன் ஃபில்டர் மூலம் தயாராகும் வாட்டரிலும் சரி , தலைகீழ் சவ்வூடு பரவல் வழியாக சுத்திகரிக்கப்படும் வாட்டரிலும் சரி செயற்கையாக சேர்க்கப்பட்ட ஆல்கலைன் தன்மையோடே உருவாகிறது ஆல்கலைன் வாட்டர். கார்பன் ஃபில்டர் வழியாக செலுத்தப்படும் நீர் அதிவேகமாக ஃபில்டரை கடந்து விடுவதால் பல வகையான நச்சு ரசாயன குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படுவதில்லை. பொதுவாக உடலை ஆல்கலைன் (காரத்தன்மை) நிலையில் வைத்திருக்க முடியாதவர்களுக்காகவே (அதாவது உடலின் அதீத அமிலத்தன்மையை குறைக்க) இந்த வகையான தண்ணீர் பரிந்துரைக்கபடுகிறது. ஆனால் நல்ல சத்துள்ள காய்கறிகள், பழங்கள், உணவுமுறைகள் மூலமாகவே அமிலத்தன்மையை குறைத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும். பிறகு எதற்கு இந்த தண்ணீர் என்று யோசிக்க ஆரம்பித்தால் அதன் வியாபார நுணுக்கங்கள் புலப்படும். இந்த தண்ணீர் தயாரிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அதன் ஆல்கலைன் பதத்தையும், இரண்டு வாரங்களில் ஆன்டி ஆக்ஸ்டென்ட் தன்மையையும் இழந்து விடுகிறது என்ற உண்மையை இதை விற்பவர்கள் நமக்கு சொல்லுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். மேலும் இவ்வகையான நீரைப் பற்றி போதுமான ஆராய்ச்சிகள் நடப்பதற்கு முன்பே எக்குத்தப்பாக பிரபலமடைந்துவிட்டது தான் பிரச்சினை.
குழாய்த் தண்ணிர் (Tap water)
நம் வீடுகளில் பைப்பை திறந்தால் வரும் தண்ணிர். மேலை நாடுகளில் குழாயில் வரும் தண்ணிரை அப்படியே க்ளாஸில் பிடித்து பருகுவார்கள். அந்த நாடுகளின் நீரின் தூய்மை அப்படி. ஆனால் நம் ஊரில் அதே போல செய்ய முடியாது. நாம் குடியிருக்கும் வீட்டில் பம்ப்செட் போட்டு நீர் சேகரித்து வைக்கும் மொட்டை மாடி தொட்டியின் நிலைமை நமக்குத் தெரியதா? அதனால் தான் காய்ச்சி வடிகட்டிய நீரை பருகும்படி அரசே நமக்கு அறிவுறுத்துகிறது.
குழாய்த் தண்ணீரில் எக்கச்சக்கமாக க்ளோரின் , ஃப்ளுரின் இவற்றோடு எந்த அளவீட்டிலும் சேராத அளவு பலவிதமான மருந்துப்பொருட்களும் கலந்துள்ளன. இந்த நீரை சுத்தம் செய்வதன் மூலம் நச்சுப்பொருட்களை நீக்க முடிந்தாலும், ஃப்ளூரின், க்ளோரின் அளவுகள் சரியாக இருப்பதில்லை. க்ளோரின் சமூக குடி நீர்த்தொட்டிகளில் அதன் கிருமி நாசினி குணத்திற்காக சேர்க்கப்படுகிறது.
நல்ல விஷயம் தானே?ஆமாம், அளவுகள் சரியான முறையில் கண்காணிக்கப்படும் வரை எதுவுமே நல்ல விஷயம் தான்.
அதைப் போலவே ஃப்ளுரினும். இயற்கையாகவே சில ஊர்களில் நீரில் ஃப்ளுரின் அதிகப்படியாக கலந்திருக்கும். நாம் பருகும் நீரில் ஃப்ளுரினின் அளவு 1பிபிஎம்க்கு மேலிருந்தால் பற்களில் மஞ்சள் கரை
( ஃப்ளூரோஸிஸ் ) முதல் எலும்பு சார்ந்த நோய்கள் (ஆஸ்டியோபோரோஸிஸ்) வரை வர வாய்ப்புள்ளது. ஃப்ளுரின் குறைவாக உள்ள ஊர்களில் அரசே குடிநீர் வாரிய சேமிப்பு தொட்டிகளிலும் (community water fluoridation) பள்ளிகளில் உள்ள நீர்த்தொட்டிகளிலும் (school water fluoridation) ஃப்ளூரினை 1பிபிஎம்க்கு குறைவாக சேர்க்கிறது. ஆனால் இந்த அளவீடுகளை சரியான முறையில் நடைமுறை படுத்துகிறார்களா என்பதில் தொக்கி நிற்கிறது ஃப்ளூரினின் நற்குணங்கள்.
குடி தண்ணீர் ( Drinking water )
இதுவும் முனிசிபல் வாட்டர் சப்ளை தான். சில வீடுகளில் குடி நீருக்கென பொருத்தப்பட்ட குழாயிலும், பல இடங்களில் தெருமுனை குழாயிலும், தண்ணீர் லாரிகளிலும் கிடைக்கும் குடி தண்ணீரை நாம் குடிப்பது சமைப்பதை தவிர மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவது கிடையாது. ஆனால் குழாய்த் தண்ணீருக்கும் குடி தண்ணீருக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை என்றே ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் (Distilled water)
எல்லா விதமான மாசுப் பொருட்களும் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்களும் நீங்கும்படி அதிதீவிர முறையில் சுத்திகரிக்கப்படுகிறது இவ்வகை நீர். ஆனால் படு சுத்தமான இந்த நீர் குடி தண்ணீராக அன்றாடம் பயன்படுத்துவதற்கு ஏதுவானது அல்ல. காரணம் ஊற்றுத் தண்ணீரிலும், குழாய் தண்ணீரிலும் இயற்கையிலேயே கலந்திருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட, நம் உடலுக்கு அத்தியாவசியமான கனிமங்கள் அனைத்தும் இதன் சுத்திகரிக்கும் முறையில் சுத்தமாக நீக்கப்படுகின்றன. ஆகையால் இவ்வகை நீர் தொழிற்சாலைகளில் தான் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. கனிமங்கள் ஏதுமில்லாத காரணத்தினால்
கனமான நச்சு உலோகங்களோடு சுலபமாக சேர்ந்து கொள்ளும் ஆற்றல் (chelation) வாய்ந்தது சுத்திகரிப்பட்ட தண்ணீர். இந்த பண்புக்காகவே இந்நீரை நம் உடலில் உள்ள தேவையற்ற கனரக உலோகங்களையும் (heavy metal toxicity) ரசாயன பொருட்களையும் நீக்க சில மாதங்கள் வரை தைரியமாக பயன்படுத்தலாம். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தினால் அத்தியாவசிய கனிம குறைபாட்டில் கொண்டு நிறுத்திவிடும் அபாயம் உள்ளது.
கிணற்று தண்ணீர் (Well water)
போர்வெல் தண்ணீர், அடி பம்ப்பில் வரும் தண்ணீர் எல்லாம் இந்த வகையை சார்ந்ததே. எல்லா நிலத்தடி நீர் வகைகளுமே ஒரளவு பாதுகாப்பானது தான், அந்த இடத்தில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத பட்சத்தில். நிலத்தடி நீர் பெரும்பாலும் ஏதாவது ஒரு உலோக (இரும்பு அல்லது மேங்கனீஸ்)வாசனையோ சுவையோ கொண்டதாகவே இருக்கும்(metallic taste) . நாம் வசிக்கும் இடம் சுத்தமானதாகவே இருந்தாலும் கூட கிணறுகள் வெகு சுலபமாக மாசுபட்டுப் போகின்றன. கிணற்று நீரை குடிப்பதற்கு உபயோகப்படுத்த முடிவெடுத்துவிட்டால் அதில் கலந்துள்ள மேங்கனீஸ் மற்றும் இன்ன பிற கனிமங்களின் நச்சு தன்மையை ஆய்வு செய்த பிறகு பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.
ஃபங்ஷனல் வாட்டர் ( Functional water/ Zero calorie water)
நல்ல குடி தண்ணீர் இயற்கையிலேயே நிறமும் சுவையும் அற்றதாக தானிருக்கும். வியாபார உத்தியாக இந்த பெயரில் விற்கப்படும் தண்ணீரில் செயற்கையான நிறமிகள், சர்க்கரை (அஸ்பார்டேம், ஃப்ரக்டோஸ்) போன்றவை சேர்க்கப்படுகின்றன. விளம்பரம் பார்த்து ஏமாறுவோர் இருக்கும் வரை இது போன்ற வியாபார உத்திகள் தண்ணீர் சந்தையில் சுலபமாக செல்லுபடியாகும்.
மினரல் வாட்டர் (Mineral water)
நாம் முதன் முதலில் பாட்டிலில் அடைத்து விற்கப்பட்ட குடிநீரை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்த போது மினரல் வாட்டர் என்ற முத்திரையுடன் தான் பார்த்திருப்போம். உண்மையில் மினரல் வாட்டர் என்பதற்கும் நாம் பருகிய/ பருகும் நீருக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லை. மினரல் வாட்டரில் சற்றேக்குறைய இருனூற்றி ஐம்பது கனிமங்களாவது கரைந்திருக்கும். அதற்கு மேல் அதில் வேறு கனிமங்களை சேர்ப்பது கடினம். நம் ஊரில் அப்படி ஒரு நீர் லிட்டர் பத்து ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? இதில் 'ஸ்பார்க்ளிங் மினரல் வாட்டர்' என்ற கார்பனேட்டட் ( carbonated )வகையும் உண்டு. அதாவது கார்பன்டை ஆக்ஸைட் வாயுவுடன் பெப்ஸி, கோக் போல கொஞ்சம் சுறு சுறு சுவையுடன் இருக்கும்.
பாட்டில் வாட்டர் (அ) பேக்கேஜ்டு குடிநீர் (Bottle water or Packaged drinking water)
நாம் காசு கொடுத்து கடைகளில் வாங்கும் பேக்கேஜெட் குடி தண்ணீர் இது. குழாய் தண்ணீருக்கும் பாட்டில் வாட்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், பல நிலைகளில் தூய்மைப்படுத்தப்பட்டே இவ்வகை தண்ணீர் சந்தைக்கு பாட்டிலில் வருகிறது. மற்றுமொரு குழப்பமான விஷயம் பாட்டில் வாட்டரை மினரல் வாட்டர் என்று நம்புவது. அடிப்படையில் மினரல் வாட்டர் வேறு, பாட்டில் வாட்டர் வேறு. அது புரியாமல் இன்னும் நம் ஊரில் பாட்டில் வாட்டரை மினரல் வாட்டர் என்றே அழைக்கிறோம். கடையிலும் அவ்வாறே கேட்கிறோம்- ' ஒரு மினரல் வாட்டர் பாட்டில் குடுங்க'. ஏன் அப்படி? அப்படியானால் என்ன வித்தியாசம் இரண்டுக்கும்?
தலைகீழ் சவ்வூடு பரவல் தண்ணீர்.
(Reverse Osmosis water).
சுருக்கமாக ஆர் ஓ (RO) வாட்டர்.
தண்ணீரை அதிக அழுத்தத்துடன் ஒரு ப்ளாஸ்டிக் சவ்வின் வழியாக அனுப்பும் போது கிடைக்கும் இந்த தூய்மையான, அதே சமயம் கொஞ்சம் சுவையுடன் கூடிய நீரில் நம் ஆரோக்கியத்துக்கு தேவையான முக்கால்வாசி கனிமங்கள் முழுவதுமாக நீக்கப்படுகின்றன. இதனால் இந்த நீரை எவ்வளவு பருகினாலும், ஊற்றுத்தண்ணீரில் தாகம் தணிவது போல் தணிவது கிடையாது. வீடுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், குளிர் பானங்கள் மற்றும் பெரும்பாலான பாட்டிலில்களில் அடைத்து விற்கப்படுவதும், இன்று பரவலாக உபயோகிக்கப்படுவதும் இந்த வகை தண்ணீரே.வீட்டுக்கு வீடு ஒரு மினி சுத்திகரிப்பு மெஷினை பைப் லைனுடன் பொருத்திவிட்டு, வாட்டர் கேன் ( water can) தண்ணியெல்லாம் மட்டம் என்று பெருமித்ததோடு ஆர் ஓ வாட்டர் புகழ் பெருக்கிவருகிறோம். இது எந்தளவு உண்மை? ஆர் ஓ வாட்டர் உண்மையில் பாதுகாப்பானது தானா??
தண்ணீரில் உள்ள வகைகளே தலைசுற்ற வைக்கிறதா? 'குடிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான தண்ணீர்' (potable water) நல்லதொரு லாபகரமான தொழிலாக முன்னேற்றமடைந்து வரும் இந்த காலகட்டத்தில் , வியாபார நோக்கில் மேலும் பல புதிய தண்ணீர் வகைகள் கவர்ச்சியான பெயர்களுடன் சந்தைக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இனி ஆர்ஓ வாட்டர் , மினரல் வாட்டர் மற்றும் பாட்டில் வாட்டர் வகையறாவின் உண்மை தன்மை குறித்தும் இந்த வகை தண்ணீர் பற்றி இதுநாள் வரை நாம் நம்பி வரும் விஷயங்களை இனியும் நம்பலாமா என்பது பற்றியும் விரிவாக பார்ப்போம் .
மருத்துவர்.அருணா ராஜ்
( இன்னும் பருகுவோம்)

No comments:
Post a Comment