தண்ணீர் தண்ணீர்- பாகம் 2.
100% சுத்தம்!!!
ஆர்ஓ வாட்டர் உபயோகிப்பவரா நீங்கள் ?
எனில் அதன் விற்பன்னர்கள் செய்து காட்டிய சாகசங்களை பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு கருவியை வைத்து குழாயில் பிடித்த நீரை சோதித்து காண்பித்து அது பழுப்பு நிறமாக மாறுவதையும், ஆர்ஓ வாட்டர் கலர் மாறாமல் பளிங்கு போல தூய்மையாக இருப்பதையும் ஒப்பிட்டுக் காண்பிப்பார்கள். நாமும் பிரமித்து போவோம். உண்மையில் இதன் வேதியல் பின்புலம் வேறு. இதன் பெயர் ஜாம் ஜார் (Jam Jar) டெஸ்ட்.
சாதாரண நீரில் எக்கசக்கமாக கனிமங்கள் இருப்பதால் அந்த கருவியின் மூலம் மின்சாரம் பாய்ச்சியதும் கனிமங்களின் வேதியியல் மாற்றம் நடந்து கலங்கலும், பழுப்பு நிறத்தில் படிமம் போலவும் நிச்சயம் ஏற்படும். ஆனால் ஆர்ஓ தண்ணியில் கனிமங்கள் அறவே இல்லாததால் நீர் சலனமற்று கலங்காமல் இருக்கும்.ஆனால் நாம் புரிந்து கொண்டது இதுவல்ல.
இதே போல் இன்னொரு டெஸ்ட்டும் நம் முன்னே செய்து காட்டப்படும். அதன் பெயர் டிடிஎஸ் (TDS) டெஸ்ட். Total dissolved solvents என்பதன் சுருக்கமே இந்த TDS. மொத்தமாக தண்ணீரில் கலந்துள்ளவற்றை பற்றிய ஒரு குத்துமதிப்பான கூட்டுத்தொகை இந்த எண். ஆர்ஓ வாட்டரில் இந்த டிடிஎஸ் அளவு மிகவும் குறைவு. பாட்டில் மற்றும் குழாய் தண்ணீரில் இதன் அளவு அதிகம். உலக சுகாதார மையத்தின் அறிக்கைபடி டிடிஎஸ் அளவு குறைந்தபட்சம் 100 mg/L இருக்கும் நீரே குடிப்பதற்கு உகந்த நீராக கருதப்படுகிறது. ஆனால் 80mg/L டிடிஎஸ் உள்ள நீர் அசுத்தமான நீர் என்பதே நம்மிடம் சொல்லப்படும் கட்டுகதை.
காரீயம், ஆர்ஸெனிக் போன்ற உலோகங்கள், பூச்சுக் கொல்லி மருந்துகள், கிருமிகள், கிருமி நாசினிகள் என்று சகலத்தையும் வடிகட்டி தூய்மையான நீரைத் தருகிறது ஆர் ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்.
இது தான் நமக்கு ஆர் ஓ வாட்டர் விற்பன்னர்கள் அன்றாடம் தொலைக்காட்சியிலும் பல சமயங்களில் வீட்டுக்கே வந்து நேரிலும் சலிக்காமல் திரும்ப திரும்ப சொல்லுவது. ஆஹா இது போதாதா நமக்கு ஒரு பொருளை வாங்க!
நம்மிடம் சொல்லாமல் விடப்படுவது - ஆர்ஓ சுத்திகரிப்பு முறை அசுத்தங்களோடு சேர்த்து அத்தியாவசிய கனிமங்களையும் காவு வாங்கி விடுகிறது என்னும் முக்கியமான உண்மையை.
மெக்னீசியம் குறைபாட்டினால் இருதய நோய்களும் , கால்சியம் குறைவினால் எலும்பு , தசை, பற்கள், இரத்தம் சம்பந்தப்பட்ட வியாதிகள், பொட்டாசியம் குறைவதால் நரம்பு தளர்ச்சி என ஏகத்துக்கு பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கால்ஷியமும் மெக்னீஷியமும் நாம் பருகும் நீரின் மூலமாகத் தான் நம் உடலில் சேர வேண்டும் என்று அவசியமில்லை. அவை பல்வேறு உணவுப் பொருட்களின் மூலம் நம் உடலில் சேர்ந்தாலும், நீரின் மூலம் கிடைக்கப்பெறும் போது அவை ரத்தத்தில் இலகுவாக கலக்கக்கூடிய மூலக்கூறுகளாக கிடைப்பது தான் அதன் சிறப்பு.
தண்ணீரில் கிடைக்காமல் போன கனிமங்களை உணவின் மூலம் 'ஓரளவே' சரிகட்ட முடியும். நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் 90% நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கின்றன. ஆனால் சமைத்தல் , பதப்படுத்துதல் , சமைத்ததை சேமித்து வைத்தல் போன்ற நிலைகளிலேயே பாதிக்குமேல் ஊட்டச்சத்தை இழந்துவிடுகிறது நாம் உண்ணும் உணவு. இது போதாதென்று கனிமங்களற்ற ஆர் ஓ தண்ணீரை சமைக்கவும் பயன்படுத்தினால் எரியும் நெருப்பில் நெய்யை வார்த்தது போலாகிவிடும்.
கனிமங்களற்ற நீர் குடிப்பதால் நாம் தான் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வீரியம் குறைந்து அவதிப்படுவோம். ஆனால் இந்த நீருக்கு அதீத வீரியமுண்டு. அது செல்லும் குழாய் முதல் தேக்கி வைக்கப்படும் தொட்டி வரை அனைத்தையும் அரித்து விடும். அவ்வாறு அரித்து எடுக்கப்படும் நச்சு பொருட்கள் அனைத்தும் இறுதியாக குடி கொள்ளும் இடம் நமது உடல் தான்! ரத்தத்தில் கலக்கும் நச்சு உலோகங்களை (காரீயம், கேட்மியம்) நீக்குவதற்கு கால்சியமும் மெக்னீசியமும் அவசியம் தேவை.கனிமங்களற்ற நீரினால் இந்த வேலையை சீராக செய்ய முடியாது.
உடலிலிருந்து வெளியேறும் போது கூட இந்த நீர் தனியாக போகாமல் துணைக்கு நம் உடலில் உள்ள மற்ற கனிமங்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு தான் வெளியேறுகிறது. அதனால் ஏற்கனவே 'இருக்கு ஆனா இல்லை' என்ற ரீதியில் கனிமக்குறைபாடு உள்ளவர்கள்(borderline) இந்த கனிமங்களற்ற நீரை அருந்துவதால் கனிமக்குறைபாடு மேலும் வலுவடைகிறது.
. கனிமங்களற்ற நீரினால் வரும் விளைவுகள் பற்றி இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறது உலக சுகாதார மையம்(WHO). இதை எந்த ஆர்ஓ வாட்டர் யூனிட் சப்ளையரும் நமக்கு சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை. ஆர் ஓ ப்ராண்டுகளிலேயே அக்வா கார்ட் பெஸ்ட்டா, கென்ட் பெட்டரா , ப்யூரிட் ஓகேவா என்று தான் நாம் பார்ப்போமே தவிர ஆர்ஓ வாட்டர்ரே ஓகே வா என்று யோசிக்கும் நிலையை கடந்து வந்து விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். இது போன்ற எண்ணற்ற திறமையான மார்கெட்டிங் உத்திகளின் மேல் சம்மணமிட்டு அமர்ந்து, தண்ணீர் உலகுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது ஆர்ஓ வாட்டர்.
அப்படியானால் ஆர்ஓ தண்ணீரை பற்றி பாஸிட்டிவ்வாக சொல்ல எதுவுமே இல்லையா? நிறையவே இருக்கிறது. ஆர்ஓ சுத்திகரிப்பு முறை கனிமங்களை நீக்கி விடுகிறது என்ற குறையை தவிர, இந்த தண்ணீரில் வேறு எந்த நச்சு பொருளோ இரசாயனமோ கிடையாது. பாட்டில், வாட்டர் கேன் வாங்கும் செலவும் மிச்சப்படுகிறது.மொத்ததில் ஆர் ஓ தண்ணீர் விற்பன்னர்கள் கூறுவதைப் போலவே கலங்கல் இல்லாத தெளிந்த, வாசனையற்ற, நோய்தொற்று கிருமிகளற்ற, சுத்தமான நல்ல சுவையுடன் கூடிய நீர் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் கனிமங்களற்ற சுத்தமான நீர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
அண்மைக் காலங்களில் ஆர்ஓ முறையில் சுத்திகரிப்பு செய்த பின்னர், தேவையான அளவு கனிமங்களை மீண்டும் தண்ணீரில் சேர்ப்பதற்கான வழிமுறைகளும் பிரபலமாகி வருகின்றன. இதற்காக கனிமங்கள் தனியாகவே கிடைக்கின்றன. ஆனால் நம் ஊரில் ஆர்ஓ வாட்டர் பற்றிய வழிப்புணர்வு போதுமானளவு இல்லாத காரணத்தால் இன்னும் இந்த விஷயங்கள் பிரபலமாகாமல் இருக்கின்றன.இரும்பு சத்துக்கு இயற்கையாக கிடைக்கும் கீரை காய்கறிகளை விட்டுவிட்டு அயர்ன் டேப்லட் ,அயர்ன் இன்ஜெக்ஷன் எடுத்துக்கொள்வதைப் போல் தான் இது.
தாகத்தை தணிக்கும் நீர் நல்ல ஆரோக்கியமான பலன்களை தராவிட்டால் கூட பரவாயில்லை, கேடு விளைவிக்காமல் இருப்பது அவசியமல்லவா?
(இன்னும் பருகுவோம்)
100% சுத்தம்!!!
ஆர்ஓ வாட்டர் உபயோகிப்பவரா நீங்கள் ?
எனில் அதன் விற்பன்னர்கள் செய்து காட்டிய சாகசங்களை பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு கருவியை வைத்து குழாயில் பிடித்த நீரை சோதித்து காண்பித்து அது பழுப்பு நிறமாக மாறுவதையும், ஆர்ஓ வாட்டர் கலர் மாறாமல் பளிங்கு போல தூய்மையாக இருப்பதையும் ஒப்பிட்டுக் காண்பிப்பார்கள். நாமும் பிரமித்து போவோம். உண்மையில் இதன் வேதியல் பின்புலம் வேறு. இதன் பெயர் ஜாம் ஜார் (Jam Jar) டெஸ்ட்.
சாதாரண நீரில் எக்கசக்கமாக கனிமங்கள் இருப்பதால் அந்த கருவியின் மூலம் மின்சாரம் பாய்ச்சியதும் கனிமங்களின் வேதியியல் மாற்றம் நடந்து கலங்கலும், பழுப்பு நிறத்தில் படிமம் போலவும் நிச்சயம் ஏற்படும். ஆனால் ஆர்ஓ தண்ணியில் கனிமங்கள் அறவே இல்லாததால் நீர் சலனமற்று கலங்காமல் இருக்கும்.ஆனால் நாம் புரிந்து கொண்டது இதுவல்ல.
இதே போல் இன்னொரு டெஸ்ட்டும் நம் முன்னே செய்து காட்டப்படும். அதன் பெயர் டிடிஎஸ் (TDS) டெஸ்ட். Total dissolved solvents என்பதன் சுருக்கமே இந்த TDS. மொத்தமாக தண்ணீரில் கலந்துள்ளவற்றை பற்றிய ஒரு குத்துமதிப்பான கூட்டுத்தொகை இந்த எண். ஆர்ஓ வாட்டரில் இந்த டிடிஎஸ் அளவு மிகவும் குறைவு. பாட்டில் மற்றும் குழாய் தண்ணீரில் இதன் அளவு அதிகம். உலக சுகாதார மையத்தின் அறிக்கைபடி டிடிஎஸ் அளவு குறைந்தபட்சம் 100 mg/L இருக்கும் நீரே குடிப்பதற்கு உகந்த நீராக கருதப்படுகிறது. ஆனால் 80mg/L டிடிஎஸ் உள்ள நீர் அசுத்தமான நீர் என்பதே நம்மிடம் சொல்லப்படும் கட்டுகதை.
காரீயம், ஆர்ஸெனிக் போன்ற உலோகங்கள், பூச்சுக் கொல்லி மருந்துகள், கிருமிகள், கிருமி நாசினிகள் என்று சகலத்தையும் வடிகட்டி தூய்மையான நீரைத் தருகிறது ஆர் ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்.
இது தான் நமக்கு ஆர் ஓ வாட்டர் விற்பன்னர்கள் அன்றாடம் தொலைக்காட்சியிலும் பல சமயங்களில் வீட்டுக்கே வந்து நேரிலும் சலிக்காமல் திரும்ப திரும்ப சொல்லுவது. ஆஹா இது போதாதா நமக்கு ஒரு பொருளை வாங்க!
நம்மிடம் சொல்லாமல் விடப்படுவது - ஆர்ஓ சுத்திகரிப்பு முறை அசுத்தங்களோடு சேர்த்து அத்தியாவசிய கனிமங்களையும் காவு வாங்கி விடுகிறது என்னும் முக்கியமான உண்மையை.
இரும்பு, கால்ஷியம், மெக்னீஷியம் , பொட்டாசியம், சோடியம் என சகலத்தையும் நீக்கிவிட்டு தூய்மையான நீரை மட்டுமே வழங்குகிறது.
கனிமங்கள் முழுதும் நீக்கப்பட்ட நீரை டீ- மினரலைஸ்டு (demineralised) வாட்டர் என்றே குறிப்பிடுகின்றனர். அதாவது கனிமங்களற்ற நீர். இந்த நீரை வெறும் சக்கையோடு ஒப்பிடலாம். இந்த சக்கையை அருந்துவதால் என்னென்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு என்று உலகசுகாதார அமையம் (World Health Organisation) ஆர் ஓ வாட்டரின் தெளிவைப் போலவே தெள்ளத்தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.கனிமக் குறைப்பாட்டினால் நமக்கு வரும் குறைபாடுகள் என ஒரு பெரிய பட்டியலே நீள்வதை பார்க்கும் போது தான் கனிமங்களின் முக்கியத்துவம் பிடிபடுகிறது.மெக்னீசியம் குறைபாட்டினால் இருதய நோய்களும் , கால்சியம் குறைவினால் எலும்பு , தசை, பற்கள், இரத்தம் சம்பந்தப்பட்ட வியாதிகள், பொட்டாசியம் குறைவதால் நரம்பு தளர்ச்சி என ஏகத்துக்கு பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
கால்ஷியமும் மெக்னீஷியமும் நாம் பருகும் நீரின் மூலமாகத் தான் நம் உடலில் சேர வேண்டும் என்று அவசியமில்லை. அவை பல்வேறு உணவுப் பொருட்களின் மூலம் நம் உடலில் சேர்ந்தாலும், நீரின் மூலம் கிடைக்கப்பெறும் போது அவை ரத்தத்தில் இலகுவாக கலக்கக்கூடிய மூலக்கூறுகளாக கிடைப்பது தான் அதன் சிறப்பு.
தண்ணீரில் கிடைக்காமல் போன கனிமங்களை உணவின் மூலம் 'ஓரளவே' சரிகட்ட முடியும். நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் 90% நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கின்றன. ஆனால் சமைத்தல் , பதப்படுத்துதல் , சமைத்ததை சேமித்து வைத்தல் போன்ற நிலைகளிலேயே பாதிக்குமேல் ஊட்டச்சத்தை இழந்துவிடுகிறது நாம் உண்ணும் உணவு. இது போதாதென்று கனிமங்களற்ற ஆர் ஓ தண்ணீரை சமைக்கவும் பயன்படுத்தினால் எரியும் நெருப்பில் நெய்யை வார்த்தது போலாகிவிடும்.
கனிமங்களற்ற நீர் குடிப்பதால் நாம் தான் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வீரியம் குறைந்து அவதிப்படுவோம். ஆனால் இந்த நீருக்கு அதீத வீரியமுண்டு. அது செல்லும் குழாய் முதல் தேக்கி வைக்கப்படும் தொட்டி வரை அனைத்தையும் அரித்து விடும். அவ்வாறு அரித்து எடுக்கப்படும் நச்சு பொருட்கள் அனைத்தும் இறுதியாக குடி கொள்ளும் இடம் நமது உடல் தான்! ரத்தத்தில் கலக்கும் நச்சு உலோகங்களை (காரீயம், கேட்மியம்) நீக்குவதற்கு கால்சியமும் மெக்னீசியமும் அவசியம் தேவை.கனிமங்களற்ற நீரினால் இந்த வேலையை சீராக செய்ய முடியாது.
உடலிலிருந்து வெளியேறும் போது கூட இந்த நீர் தனியாக போகாமல் துணைக்கு நம் உடலில் உள்ள மற்ற கனிமங்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு தான் வெளியேறுகிறது. அதனால் ஏற்கனவே 'இருக்கு ஆனா இல்லை' என்ற ரீதியில் கனிமக்குறைபாடு உள்ளவர்கள்(borderline) இந்த கனிமங்களற்ற நீரை அருந்துவதால் கனிமக்குறைபாடு மேலும் வலுவடைகிறது.
. கனிமங்களற்ற நீரினால் வரும் விளைவுகள் பற்றி இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறது உலக சுகாதார மையம்(WHO). இதை எந்த ஆர்ஓ வாட்டர் யூனிட் சப்ளையரும் நமக்கு சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை. ஆர் ஓ ப்ராண்டுகளிலேயே அக்வா கார்ட் பெஸ்ட்டா, கென்ட் பெட்டரா , ப்யூரிட் ஓகேவா என்று தான் நாம் பார்ப்போமே தவிர ஆர்ஓ வாட்டர்ரே ஓகே வா என்று யோசிக்கும் நிலையை கடந்து வந்து விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். இது போன்ற எண்ணற்ற திறமையான மார்கெட்டிங் உத்திகளின் மேல் சம்மணமிட்டு அமர்ந்து, தண்ணீர் உலகுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது ஆர்ஓ வாட்டர்.
அப்படியானால் ஆர்ஓ தண்ணீரை பற்றி பாஸிட்டிவ்வாக சொல்ல எதுவுமே இல்லையா? நிறையவே இருக்கிறது. ஆர்ஓ சுத்திகரிப்பு முறை கனிமங்களை நீக்கி விடுகிறது என்ற குறையை தவிர, இந்த தண்ணீரில் வேறு எந்த நச்சு பொருளோ இரசாயனமோ கிடையாது. பாட்டில், வாட்டர் கேன் வாங்கும் செலவும் மிச்சப்படுகிறது.மொத்ததில் ஆர் ஓ தண்ணீர் விற்பன்னர்கள் கூறுவதைப் போலவே கலங்கல் இல்லாத தெளிந்த, வாசனையற்ற, நோய்தொற்று கிருமிகளற்ற, சுத்தமான நல்ல சுவையுடன் கூடிய நீர் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் கனிமங்களற்ற சுத்தமான நீர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
அண்மைக் காலங்களில் ஆர்ஓ முறையில் சுத்திகரிப்பு செய்த பின்னர், தேவையான அளவு கனிமங்களை மீண்டும் தண்ணீரில் சேர்ப்பதற்கான வழிமுறைகளும் பிரபலமாகி வருகின்றன. இதற்காக கனிமங்கள் தனியாகவே கிடைக்கின்றன. ஆனால் நம் ஊரில் ஆர்ஓ வாட்டர் பற்றிய வழிப்புணர்வு போதுமானளவு இல்லாத காரணத்தால் இன்னும் இந்த விஷயங்கள் பிரபலமாகாமல் இருக்கின்றன.இரும்பு சத்துக்கு இயற்கையாக கிடைக்கும் கீரை காய்கறிகளை விட்டுவிட்டு அயர்ன் டேப்லட் ,அயர்ன் இன்ஜெக்ஷன் எடுத்துக்கொள்வதைப் போல் தான் இது.
தாகத்தை தணிக்கும் நீர் நல்ல ஆரோக்கியமான பலன்களை தராவிட்டால் கூட பரவாயில்லை, கேடு விளைவிக்காமல் இருப்பது அவசியமல்லவா?
(இன்னும் பருகுவோம்)
No comments:
Post a Comment